Asianet News TamilAsianet News Tamil

“உங்களுக்கு 2 பொண்டாட்டியா..??? அப்போ நீங்க கண்டிப்பா TNPSC எழுத முடியாது.....!!!!

tnpsc important-notice-about-exam-rule
Author
First Published Nov 10, 2016, 4:30 AM IST


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 19-ம் தேதி மூன்று கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது. 

இதனிடையே, டி.என்.பி.எஸ்.சி., அதிரடியாக பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

அவற்றுள் சில பின்வருமாறு:-

தேர்வர்கள் யாரும், சிபாரிசுக்காக, தேர்வாணைய தலைவர், செயலர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்கக் கூடாது. சந்திக்க முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை.

tnpsc important-notice-about-exam-rule

விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ, தேவையற்ற இடங்களில் எழுதினால், எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை.

அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில், வண்ண பேனா கிரயான்கள், ஒயிட்னர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது

வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்டபெயர், சுருக்கொப்பம், முகவரி தவிர, மற்ற பெயர், கையொப்பம், சுருக்கொப்பம்,தொலைபேசி, மொபைல் போன் எண், முகவரி மற்றும் மதம் சார்ந்த குறியீடு இடுதல் கூடாது

விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில், கெஞ்சி கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்கு தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில் எழுதக் கூடாது

கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டிலும், மாற்றி, மாற்றி எழுதினால், அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும்

தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய, ஸ்மார்ட் வாட்ச்,மோதிரம், கம்யூனிகேஷன் சிப், மொபைல் போன், பல விபரங்கள் உடைய கால்குலேட்டர்களை,தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது* தேர்வர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது.

விண்ணப்பதாரர் பெண்ணாக இருந்தால், ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய்திருக்கக் கூடாது என டி.என்.பி.எஸ்.சி., அதிரடியாக பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios