tnpsc group 4 result published
பதினேழரை லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை www.tnpsc.gov.in என்ற தனது இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் என 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர்.. இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர்.

