நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாலாஜாபாத் பேரூராட்சியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை பணிகளில் தமிழகம் முழுக்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கோட்டியாக இருந்து வந்த வாலாஜாபாத் பேரூராட்சியை கடந்த தேர்தலில் அ.தி.மு.க.கைப்பற்றி இருந்தது.
இந்த நிலையில், தற்போதைய தேர்தலில் வாலாஜாபாத் பேரூராட்சியை யார் கைப்பற்றுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 இடங்களையும், அ.தி.மு.க. 5 இடங்களையும் பெற்றுள்ளன.
இதனால் வாலாஜாபாத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 40 ஆண்டுகளாக தி.மு.க. வசமிருந்த வாலாஜாபாத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. கைப்பற்றியது. இந்த நிலையில், ஆட்சியில் உள்ள தி.மு.க. மீண்டும் வாலாஜாபாத் பேரூராட்சியை கைப்பற்றி இருக்கிறது.
