புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட கறம்ப்பக்குடி பேரூராட்சி 7 வார்டு அதிமுக வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 268 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தற்போது வரை வெளியான முடிவுகளின் படி பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முகமது இப்ராம்சா ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இதே வார்டில் இபம்ராம்சா மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தும், அவர் ஒரு ஓட்டுக் கூட பெறவில்லை. ஒரு ஓட்டு கூட பெறாததால் வேட்பாளர் அதிர்ச்சி அடைந்தார்.
