Asianet News TamilAsianet News Tamil

ஜன.9 முதல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்... அறிவித்தார் சபாநாயகர் அப்பாவு!!

2023 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.9 ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 

tn legislative assembly will start from jan 9 says speaker appavu
Author
First Published Dec 26, 2022, 8:51 PM IST

2023 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.9 ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களொடம் பேசிய அவர், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்து ஜன.9 ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அதிமுகவினர் தொடர்ந்து கைது.. கரூரில் தொடரும் பதற்றம்.. முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சவால்!

ஆளுநர் உரை, கேள்வி நேரம் மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். தற்போதைய சூழலில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூட்டத்தொடரின் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து வரலாம். கட்டாயம் இல்லை. கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இதையும் படிங்க: தமிழகத்தில் கொரோனா நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்... அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல்!!

புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோருக்கு இடையே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் கடிதம் அனுப்பியுள்ளனர். குறிப்பு உரையில் இதை விளக்கமாக தெரிவித்துவிட்டேன். இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எந்த மறுப்பும் தெரிவிக்காததால், அதே நிலை தொடரும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios