புதுக்கோட்டை,
தமிழ்க் கலாச்சாரத்தை தெரிந்து கொள்வதற்காக இங்கிலாந்து நாட்டவர்கள் தமிழக வீதிகளில் சுற்றித் திரிகின்றனர். அதுவும் மோட்டார் சைக்கிள்களில்.
தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 18 பேர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் மாமல்லபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் நேற்று தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்தனர். புதுக்கோட்டையில் உள்ள மக்களிடம், அந்த ஊரைப் பற்றிய சுவாரசியமான தகவல்களைத் தெரிந்து கொண்டும், அங்குள்ள உணவு முறைகள், மக்கள் பழக்கவழக்கங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் புதுக்கோட்டையில் இருந்து செட்டிநாடு நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செட்டிநாட்டில் இருந்து மதுரை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு விட்டு இறுதியாக கேரள மாநிலம் கொச்சிக்கு செல்லும் திட்டத்தை வைத்துள்ளனர்.
