தமிழக அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு விவரம்... மக்களுக்கான கையேட்டை வெளியிட்டது தமிழக அரசு!!
தமிழக அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு செலவு கையேடு குடிமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு கையேடு குடிமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (20.03.2023) தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தமிழக அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு கையேடு குடிமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
வரவு - செலவுத் திட்டத்தின் பொருண்மைகள்
- பெண்கள் முன்னேற்றம்
- திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பளித்தல்
- விளிம்பு நிலையில் உள்ளோரின் சமூக- பொருளாதார முன்னேற்றம்
- அனைத்து தளங்களிலும் சமூக நீதியை உருவாக்குதல்
- சமச்சீர் வளர்ச்சியினை எய்துதல்
இதையும் படிங்க: அறநிலையத்துறை பள்ளிகளில் இந்து சமய கல்வி கட்டாயம்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
வரவு- செலவுத் திட்டத்தின் மொத்த மதிப்பு
- மொத்த செலவினங்கள் ₹ 3,65,321 கோடி
- மொத்த வரவினங்கள் ₹ 2,73,246 கோடி
மாநிலத்தின் வருவாயினங்கள்:
2023-24 ஆம் ஆண்டுக்கான வருவாய் வரவினங்கள் 2,70,515 கோடி ரூபாயாக அரசு மதிப்பீடு செய்துள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டை விட (திருத்த மதிப்பீடுகள்)10.1 சதவீதம் அதிகமாகும். அரசின் சொந்த வரிகள் வாயிலாக பெறப்படும் வருவாய் 19.3 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தூத்துக்குடி ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!
மாநிலத்தின் செலவினங்கள்:
2023-24 ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவினங்கள் 3,65,321 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 (திருத்த மதிப்பீடுகள், ஆம் ஆண்டை விட 13.7 சதவீதம் அதிகமாகும். வருவாய்ச் செலவினங்கள் பெருமளவில், ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களுக்காக செலவினங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மூலதனச் செலவினங்கள்:
மூலதனப் பணிகளுக்கு செலவிடூவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான உத்வேகத்தை அரசு அளிக்கும். 2023-24 ஆம் ஆண்டிற்கான மூலதனச் செலவு 44,366 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 (திருத்த மதிப்பீடுகள்) ஆம் ஆண்டை விட 15.7 சதவீதம் அதிகமாகும்.