தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பணிகள்:
- அலுவலக உதவியாளர்
- இரவுக்காவலர்
காலிப்பணியிடங்கள்:
- அலுவலக உதவியாளர் - 02
- இரவுக்காவலர் – 01
மொத்தம் - 03
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்
தகுதிகள்:
அலுவலக உதவியாளார் பணி:
- இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- ரூ.15,700 - ரூ.50,000 / மாதம்
இரவுக்காவலர் பணி:
- இதற்கு விண்ணப்பிக்க எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- ரூ.15,700 - ரூ.50,000 / மாதம்
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களுக்கு 01.07.2022- இன் படி பொதுப்பிரிவினர் 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- பழங்குடியின பிரிவினர் / ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!
விண்ணப்பிப்பது எப்படி?
- விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று, பற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் ஆகியவையுடன் https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2023/03/2023030786.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.
முகவரி :
ஆணையாளர்,
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்,
புதுக்கோட்டை-528103
தொலைபேசி எண் : 0461-2271222
கடைசி தேதி:
- 07.04.2023
