tn govt raised voice against highcourt judgement regarding merina protest
மெரினாவில் போராட்டம் நடத்த தடை கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்து உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 90 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டம் மெரினாவில் நடத்த அனுமதி கோரி அய்யாகண்ணு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா, அமைதியான முறையில் ஒரு நாள் மட்டும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெர்வித்து, மெரினாவில் விவசாயி அய்யாகண்ணு ஒரு நாள் உண்ணா விரத போராட்டம் நடத்தக் கூடாது என மேல் முறையீடு செய்து உள்ளது
போராட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும்,தமிழக உள்துறை செயலர் காவல் துறை இயக்குனர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவானது இன்னும் சற்று நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
