Asianet News TamilAsianet News Tamil

இதெல்லாம் நியாயமில்லை.. தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை கொடுங்க.. ராமதாஸ் வைத்த கோரிக்கை!

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் கற்பித்தல் தன்னார்வலர்களாக பணியாற்றி வரும்  ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.1000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Tn govt must provide education project volunteers said pmk leader ramadoss
Author
First Published Jun 5, 2022, 12:47 PM IST

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைக் களையும் பொருட்டு இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தன்னார்வலர்கள் மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாகவே சென்று பாடம் நடத்துவார்கள். இத்திட்டம் சென்னையில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது. அடுத்து படிபடியாக வெவ்வேறு மாவட்டங்களும் செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை தரப்பில் சொல்லப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை மையங்களுக்கு அனுப்ப வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற வீதத்தில் திட்டம் செயல்படுத்தப்படும்.
Tn govt must provide education project volunteers said pmk leader ramadoss

மொத்தம் 17 லட்சம்  தன்னார்வலர்கள் வரை இந்த திட்டத்திற்கு தேவைப்படும்,  அந்த ஆறு மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  எனவே இத்திட்டத்தில் லட்ச கணக்கில் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.இதில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் பாமக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் கற்பித்தல் தன்னார்வலர்களாக பணியாற்றி வரும்  ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.1000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்தக் குற்றச்சாட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்! இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. வேறு வேலை செய்யாத  பலருக்கு அது தான் வாழ்வாதாரம்.  அதையும் குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது நியாயமல்ல! இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் செய்வது சேவை ஆகும். அவர்களில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது.  அவர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க : Vikram: பத்தல, பத்தல..விக்ரம் படத்துக்கு சவுண்ட் பத்தல.! கடுப்பான ரசிகர்கள்.. தியேட்டரில் ரகளை !

இதையும் படிங்க : பெண்கள் ஹாஸ்டலில் ரகசிய கேமரா..1,000க்கும் மேற்பட்ட வீடியோஸ்.. சிக்கிய ஹார்ட் டிஸ்க்.! போலீஸ் ஷாக் !

Follow Us:
Download App:
  • android
  • ios