பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு.. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.. மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்!!
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும்பகுதிநேர சிறப்பு ஆசிரியர் களுக்கான ஊதியம் ரூ. 12, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ. குமரகுருபரன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு ரூ. 10, 000 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் கோரிக்கை வைத்தார்.
வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் தேவையில்லை.. உடனே முந்துங்க..
அதை நன்கு பரிசீலித்த அரசு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் பணிபுரியும் 12,105 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் தொகுப்பூதியத்தை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு வரும் தொடர் செலவினம் ரூ. 33. 29 கோடிக்கும் நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிடப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு ரூ. 9. 07 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பகுதிநேர ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!