Asianet News TamilAsianet News Tamil

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை விவகாரம்… மத்திய அரசின் தலையீடு தேவையில்லை என தமிழக அரசு வாதம்!!

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு தேவையில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. 

tn govt argues that there is no need for central govts intervention in nalini ravichandrans release issue
Author
First Published Oct 14, 2022, 9:23 PM IST

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு தேவையில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் ரவிச்சந்திரன் தங்களை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தூக்கு தண்டனை கொடுத்தே தீர வேண்டும்.. மாணவி சத்யா கொலை வழக்கில் விஜயகாந்த் கருத்து !

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவேதி, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த முகாந்திரமும் இல்லை, ஏற்கனவே இதுதொடர்பான ஒரு வழக்கில் தெளிவாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என தெரிவித்தார். அதேபோல் நளினி, ரவிசந்திரன் தரப்புக்கா ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் வழக்கறிஞர் ஆனந்தசெல்வம், இந்த விவகாரத்தில் தற்போதைக்கு மத்திய அரசின் தலையீடு தேவையில்லை என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயராமன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் ; காவல்துறையிடம் அறிக்கை கேட்டு நீதிமன்றம் உத்தரவு!!

அதற்கு நீதிபதிகள் இந்த விவகாரத்தில், மத்திய அரசு தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும், அதேவேளில் இன்று வேறு ஒரு வழக்கு விசாரணைக்கா இந்த அமர்வு மாற வேண்டியுள்ளதால் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய  வழக்கு விசாரணையை  வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கலாம் என தெரிவித்து, வழக்கு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, விடுதலை தொடர்பான அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினால் ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான பல்வேறு உத்தரவுகளை மேற்கோள் காட்டி, நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios