Asianet News TamilAsianet News Tamil

”மகிழ்ச்சி செய்தி”.. மிஸ் பண்ணாம பாருங்க.. சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகை உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித் தொகையினை 50,000-லிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
 

TN Government has increased the stipend for the best writers from Rs 50000 to Rs 1 Lakh
Author
Tamilnádu, First Published Jun 29, 2022, 5:54 PM IST

சிறந்த எழுத்தாளர்களுக்கு  தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து அதன் சங்கம் மூலம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதியை ரூ. 50,000-லிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்இ குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு வெளியானது.. எப்படி பார்ப்பது..? நேர்காணல் எப்போது..? முழு தகவல்

மேலும் படிக்க:Suriya : தம்பிக்கு பாராட்டுக்கள்.! நடிகர் சூர்யாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா ?

மேலும் படிக்க:தமிழகத்தில் இன்று கனமழை.. 7 மாவட்டங்களில் அலர்ட்.. வானிலை அப்டேட்..

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,”ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இலக்கிய மேம்பாட்டு பணி அமைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டி தொகையிலிருந்து பத்து ஆதிதிராவிடர் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் உள்ளிட்ட 11 எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பினை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தலா 50,000 அல்லது நூல் வெளியிட ஆகும் செலவு இவற்றில் எது குறைவோ,., அத்தொகையை வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி திருத்திய நடைமுறைகள் மற்றும் உதவித்தொகையினை 50,000-லிருந்து ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios