டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் கூட வெற்றி பெற்று முன்னேற வேண்டுமெனில் அதற்கான ஒரே ஆயுதம் கல்வி தான். ஆம். கல்வியால் ஒருவர் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதற்கு பலரை உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் 23 வயதே ஆன இளம் பெண் ஒருவர் தமிழ்நாட்டில் முதல் பெண் பழங்குடியின நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ பதி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், வறுமையில் போராடி கல்வி பயின்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பை படிக்கும் போதே ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். 

சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு காரணம் யார்.? அதிமுக- திமுக சட்டப்பேரவையில் காரசார மோதல்

இந்த சூழலில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. ஆனால் அப்போது ஸ்ரீ பதி மீண்டும் கருவுற்று இருந்ததார். எனினும் எப்படியாவது தேர்வை எழுதிவிட வேண்டும் என்று உறுதியாக இருந்த ஸ்ரீ பதிக்கு தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒன்றாக வந்தது அதிர்ச்சியை அளித்தது. 

மன உறுதியுடன் இருந்த இருந்த ஸ்ரீபதிக்கு தேர்வுக்கு ஒரு நாள் முன்பு குழந்தை பிறந்துள்ளது. பொதுவாக பிரசவத்திற்கு பின் பெண்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சில வாரங்களாகும். ஆனால் பிரசவமான இரண்டாவது நாளே தனது கணவரின் உதவியுடன் காரில் வந்து சிவில் நீதிபதி தேர்வை எழுதினார். 

வலிகளுக்கு இடையே தேர்வை எழுதி காத்திருந்த ஸ்ரீ பதிக்கு கைமேல் பலன் கிடைத்தது. சமீபத்தில் சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் ஸ்ரீபதி வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீபதி.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைகிறாரா? யார் முன்னிலையில் தெரியுமா?

பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளித்து வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்.

Scroll to load tweet…

சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.