இந்து திருமண சடங்குகளை விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்: வைரலாகும் பழைய வீடியோ!
இந்து திருமண சடங்குகளை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
இந்து திருமணங்களில் நடைபெறும் வைதீக சடங்குகளை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து பேசும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திராவிட சுயமரியாதை இயக்கத் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்டாலின், பாரம்பரிய இந்து திருமண மந்திரங்கள் மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்துவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
ஒரு நிமிடம் மற்றும் நாற்பது வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், இந்து திருமண சடங்குகளை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து பேசுகிறார். திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் தரையில், சடங்கு நடத்தும் பூசாரி அருகில் எப்படி அமர்ந்திருக்கிறார்கள். புனித நெருப்பிலிருந்து வரும் புகை கண்ணீரை உண்டாக்குவது, பூசாரி மந்திரங்களை உச்சரிப்பது உள்ளிட்ட நிகழ்வுகளை நகைச்சுவையாக அவர் விவரிப்பது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அண்மையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.
'பாரத ஜனாதிபதி': ஜி20 அழைப்பிதழில் பெயர் மாற்றம்!
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்து திருமண சடங்குகளை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.