தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற மழை வெள்ளக் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாராட்டு விழாவைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மழை, வெள்ளக் காலங்களில் சிறப்பாக பணியாற்றியிருக்கக்கூடிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டக்கூடிய வகையில் சென்னை ரிப்பன் கட்டடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். எனக்கு எத்தனையோ பாராட்டு விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அந்த விழாக்களையெல்லாம்விட, உங்களைப் பாராட்டக்கூடிய இந்த விழாவைத் தான் நான் பெருமையாகக் கருதுகிறேன்.
அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். அந்த இரண்டு சாதனைகளைப் படைத்த காரணத்தால், மக்களிடத்திலே நமக்கு மிகப் பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.15 வரை அவகாசம் நீட்டிப்பு
ஒன்று – கொரோனா என்ற கொடிய நோயை எதிர்த்து அதை வென்றோம். அது ஒரு பாராட்டு. இரண்டாவது - மழை, வெள்ளத்தில் இருந்து மக்களைக் காத்தோம், அது இரண்டாவது பாராட்டு. கொரோனாவை கட்டுப்படுத்தியதற்குப் பிறகு உடனடியாக ஒரு மிகப்பெரிய மழையை நாம் சந்தித்தோம்.
ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் அதிலும் குறிப்பாக பத்தாண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்ட காரணத்தால், அந்த முதல்முறை மழை எந்த அளவிற்குப் பெய்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மழையை, அந்த வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் நமக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. ஆனால், அந்த நெருக்கடிகளை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வரக்கூடிய காலக்கட்டங்களில் எப்படி நாம் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டோம்.
அடுத்த மழை வருவதற்கு முன்னால் அல்லது ஒரு வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னால், என்ன மழை பெய்தாலும் அந்த மழையின் காரணமாக தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற ஒரு சூழலை உருவாக்குவதற்காக நாம் உறுதி எடுத்துக் கொண்டோம். உறுதி எடுத்துக்கொண்டது மட்டுமல்ல, அந்த உறுதியை எந்த அளவிற்கு நிறைவேற்றிக் காட்டினோம் என்பது நாட்டிற்கும் தெரியும், உங்களுக்கும் நன்றாகத் தெரியும். அதைத்தான் நான் குறிப்பிட்டுச் சொன்னேன், மிகப் பெரிய இரண்டு சாதனைகளை நாம் செய்து முடித்திருக்கிறோம்.
பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மு.க.அழகிரி
சமூக வலைத்தளங்களில் - இது கடந்த முறை இங்கு தண்ணீர் தேங்கி இருந்தது என்று அந்தப் படத்தையும் போட்டு, இந்த முறை அந்தப் பகுதியில் தேங்கவில்லை என்ற அந்தப் படத்தையும் போட்டு மக்களிடத்தில் எடுத்துக் காட்டினார்கள். பொதுமக்களும் அதை வாட்ஸ்ஆப்-ல் பகிர்ந்த அந்த செய்திகளையெல்லாம் நாம் தொடர்ந்து பார்த்தோம். நான் அந்த செய்திகளையெல்லாம் பார்த்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது என்றார்.
இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து முதல்வர் உணவருந்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட் வருகின்றன.