TN Budget 2022: விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகம்அமைக்கப்படும். பெரியாரின் சிந்தனைகளை அடங்கிய தொகுப்பை மின்நூல் அடிப்படையில் வெளியிட ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அறிவித்தார்

விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகம்அமைக்கப்படும். பெரியாரின் சிந்தனைகளை அடங்கிய தொகுப்பை மின்நூல் அடிப்படையில் வெளியிட ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அறிவித்தார்

தமிழ் வளர்ச்சி

கடந்த 2021-22ம் ஆண்டு திருத்த பட்ஜெட்டில் தமிழ் வளர்ச்சிக்கு ரூ80.26 கோடியும், தொல்லியல்துறைக்கு ரூ.29.43 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் தமிழ்வளர்ச்சிக்கு ரூ.82.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அவர் பேசியதாவது:

பெரியார் சிந்தனைகள்

பெரியாரின் சிந்தனைகளை உலகளவில் அறியச்செய்யும் விதத்தில் பெரியார் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 இந்திய மற்றும் உலகமொழிகளில் அச்சுப்பதிப்பாகவும், மின்னணு பதிப்பாகவும் வெளியிடப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலவச பாடப்புத்தகங்கள்

தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் நோட்டுப்புத்தகம், பாடநூல்கள், அரசு உதவியி்ன்றி செயல்பட்டுவரும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10வகுப்புவரை இலவசமாக வழங்கப்படும் இதற்காக ரூ.15 கோடி ஒதுக்கப்படும்

அகழ்வாராய்வு

கடந்த ஆண்டு சிவகங்கைமாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர்மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் அகழ்வாராய்வு நடந்தது. வரும் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி தர்மபுரி மாவட்டம் பெரும்பாலைய்ல அகழ்வாராய்வு நடக்கும்.

ஆழ்கடல்ஆய்வு

புதியகற்கால இடங்களைத் தேடி 5 இடங்களில் அகழ்வாராய்வும், பொருநை ஆற்றில் தொல்லியல் இடங்களைத் தேடி கள ஆய்வும் நடத்தப்படும். 
கொற்கையில் ஆழ்கடல்ஆய்வு நடத்தும் இடத்தை கண்டறிய இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, முன்களஆய்வு நடத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம்

விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். குற்றாலத்தில்உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல்பழங்கால வைப்பகம், தர்மபுரியில் நடுகல்வைப்பகம் ஆகியவை ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்

தமிழகத்தில் உள்ளபழங்காலக் கட்டிடங்களை அதன் பழமைத்தன்மை மாறாமல் புதுப்பித்து, பாதுகாக்கவும் சீரமைக்கவும் ரூ.50 கோடி ஒதுக்கப்படும். 

இவ்வாறு பழனிவேல் ராஜன் தெரிவித்தார்