அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மாநில பாடத்திடத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76 % பேரும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07 % பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் 97.95% பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 10 ஆம் வகுப்பில் 97.22% பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.
இதில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9. 12 லட்சம் மாணவ, மாணவிகளில் 8. 21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 4.27 லட்சம் (94.38%) பேர் மாணவிகள், 3.94 லட்சம் (85.83%) பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க:பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மதிப்பெண் சான்றிதழ் எப்போது, எப்படி பெறலாம்..? அறிவிப்பு..
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 19 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட மாதங்களில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
இந்நிலையில் தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். www.tngasa.in.,www/tngasa.org என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிப்பது எப்படி..? கலந்தாய்வு எப்போது.. ? முழு விவரம்..
