tmmk to the Central Government which implemented the Muttalak Act Condemnation Protest meeting
இராமநாதபுரம்
முத்தலாக் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் பொதுக்கூட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
முத்தலாக் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசக் கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பாவோடி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு இராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் அப்பாஸ் அபுதாகிர் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஜஹாங்கீர், மாவட்டப் பொருளாளர் பரக்கத்துல்லா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் தொண்டி சாதிக் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் பாரீஸ் வரவேற்ற இதில், மாநில தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்று முத்தலாக் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து தொண்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இளைஞர்களிடம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போதை பழக்கத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என்பது குறித்து மாநில கொள்கைப் பரப்பச் செயலாளர் கோவை செய்யது பேசினார்.
அதன்பின்னர், "தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்து வேண்டும்" உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் ம.ம.க. மாநிலத் துணப் பொதுச் செயலாளர் மதுரை முகமது கௌஸ், இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் அன்வர் அலி, முன்னாள் மாவட்டப் பொருளாளர் ஜாகிர் உசைன், தொண்டி ம.ம.க. செயலாளர் அப்துல் காதர், த.மு.மு.க. செயலாளர் ஜலால்,
துணை தலைவர் இபுராகிம், ம.ம.க. துணை செயலாளர் மைதீன், தெற்கு செயலாளர் மீரான், முன்னாள் வக்கீல் அணி செயலாளர் கலந்தர் ஆசிக், ஜமாத் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் இறுதியில் தொண்டி நகர் த.மு.மு.க. தலைவர் வழக்கறிஞர் முகமது ஜிப்ரி நன்றித் தெரிவித்தார்.
