TMB bank rabbery

மன்னார்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நான்கு கொள்ளையர்கள் ரூ8 லட்சம் பணத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர் உடன் கண்காணிப்பு கேமராவையும் எடுத்துச் சென்றனர்.

சம்பவம் நடந்ததை உணர்ந்து மன்னார்குடி காவல்துறை விரைந்து வந்து பல்வேறு கோணத்தில் விசாரணையை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக ஊழியர்களிடம் விசாரணையை தொடங்கியுள்ளது. 

கொள்ளைச் சம்பவம் நடந்த பொழுது முப்பதுக்கு மேற்பட்ட ஊழியர்களும் வாடிக்கையாளர்கள் பலரும் இருந்துள்ளனர். மக்கள் வசிப்பிடத்தின் அருகிலே இருக்கும் வங்கிக்கிளையில் நடந்துள்ள துணிகர கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.