திருவண்ணாமாலை மாவட்ட ஆட்சியர் சக ஊழியர்களுடன் புல் தரையின் மீது அமர்ந்து உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். அப்போது, மதிய உணவு வேளையின் போது, பூங்கா பகுதி ஒன்றின் புல் தரையின் மீது சக ஊழியர்களுடன் அமர்ந்து சகஜமாக ஆட்சியர் பிரசாந்த் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக, கடந்த 11ம் தேதி திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம், தண்டராம்பட்டு மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்ட அந்த வழியாக சென்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் காரிலிருந்து இறங்கி கீழே விழுந்த அந்த வாலிபரை தனது காரிலேயே அழைத்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.