Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் தோல்வியால் விரக்தி... மநீம வேட்பாளர் விபரீத முடிவு... திருப்பூரில் சோகம்!!

திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

tirupur mnm candidate commits suicide due to electoral defeat
Author
Thirupur, First Published Feb 25, 2022, 4:02 PM IST

திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. திருப்பூர் மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றி உள்ளது. அதேபோல பெரும்பான்மையான நகராட்சிகள் மற்றும் நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

tirupur mnm candidate commits suicide due to electoral defeat

இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வருபவர் மணி. 55 வயதான இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்து வந்தார். இவரது மனைவி சுப்பாத்தாள். மணி மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டார். அந்த பகுதியில் தனக்கு செல்வாக்கு உள்ளதாகவும், கண்டிப்பாக வெற்றி பெறுவேன் எனவும் அப்பகுதி மக்களிடம் கூறி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது, மக்கள் நீதி மையம் வேட்பாளர் மணி வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

tirupur mnm candidate commits suicide due to electoral defeat

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் திவாகரன் 3,319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றர். தான் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் இருந்த மணி, வெறும் 44  ஓட்டுகள் மட்டுமே கிடைத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன் மனைவி இடையே நேற்று தகராறு நடந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணி, நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த வாக்குகள் வாங்கிய விரக்தியில் வேட்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios