திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருமலை - திருப்பதி தேவஸ்தானம் மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து தபால் நிலையங்களில் அனுமதி சீட்டு மற்றும் தங்கும் வசதிக்கான முன்பதிவு வசதியை இன்று துவங்கியுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு, ஆன்லைன் டிக்கெட் விற்பனை இருந்து வருகிறது. இதனால், திருப்பதி செல்லும் பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட்டுகளை பதிவு செய்து, சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மேலும் ஒரு சிறப்பு ஏற்பாட்டை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக தபால் நிலையங்களில் டிக்கெட் விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சென்னை தி.நகர், மற்றும் மயிலாப்பூர் தலைமை தபால் நிலையங்களில் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

திருப்பதி செல்ல அனுமதி சீட்டு, தங்கும் வசதி ஆகியவற்றுக்கான முன் பதிவுவை இந்த தபால் நிலையங்களில் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தபால் நிலையங்களில் பெறும் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. திருமலை - திருப்பதி தேவஸ்தானம் - இந்திய அஞ்சல் துறை இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.