திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவர் குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு இன்று அதிகாலை காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை முருகன் ஓட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அருவாப்பாக்கம் பகுதியில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரமாக நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி தாய்-மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
