Tikkulittu drunken old man to death

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே குடி போதையில் தீக்குளித்த முதியவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, திண்டிவனம் வட்டம், சித்தணி கிராமத்தைச் சேர்ந்த சத்யபால் (65). இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர், குடித்துவிட்டு செம்ம போதையில் இருந்தார்.

தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு போதையில், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அதில், உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அவரை மீட்டு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் கொண்டு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுபற்றி விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.