Asianet News TamilAsianet News Tamil

அரசு பேருந்துகளில் திடீர் டிக்கெட் விலை உயர்வு - செம கடுப்பில் பயணிகள்!!

ticket price hike in government buses
ticket price hike in government buses
Author
First Published Jul 26, 2017, 11:15 AM IST


எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தமிழக அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கட்டணம் உயர்தப்பட்டிருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் அரசாணை இல்லாமல், அரசின் அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து கழகங்களே கட்டண உயர்வு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த கட்டண உயர்வு, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் உயர்தப்பட்டுள்ளதாகவும், விரவில் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

ticket price hike in government buses

டீசல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க, பேருந்துகளில் கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேருந்து கட்டண உயர்வு சாமானிய மக்கள் மீது அதிக பாரத்தை சுமத்தும் செயல் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அது மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை தமிழக அரசு திடீரென குறைத்து விட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக பள்ளி - கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் பெரும் அலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios