மூன்று வயதில் மெகா சாதனை.. கொடியை வைத்து நாடுகளை கண்டுபிடிக்கும் திறன் - அசத்தும் தமிழக குட்டிஸ் க்ருதிஷா!
Baby Krutisha : ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது கற்று அறிந்த பெரியவர்களுக்கே கடினமாக உள்ள நிலையில், சில பிஞ்சு குழந்தைகள் பெரும் சாதனை படைத்து வருகின்றனர்.
உலகெங்கிலும் எண்ணற்ற குழந்தைகள் தங்கள் வயதிற்கு அப்பாற்பட்ட அசாதாரண திறன்களை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த 3 வயது க்ருதிஷாவின் பெற்றோர்கள் தங்கள் மகளும் அப்படிப்பட்ட ஒரு அசாதாரண குழந்தை என்று நம்புகிறார்கள். அந்த குழந்தையும் அப்படி ஒரு அசாதாரண குழந்தையாகத்தான் வளர்ந்து வருகின்றார்.
இப்பொது மழலையர் பள்ளியில் இருக்கும் க்ருதிஷா, உலகில் உள்ள அனைத்து 195 நாடுகளின் பெயரை சொல்வதுமட்டுமல்லாமல். ஒவ்வொரு நாட்டையும் அதன் தேசியக் கொடிகளை கொண்டு அடையாளம் காண முடியும் என்று நிரூபித்து வருகின்றார். தனது மழலையர் பள்ளியில் விளையாடிக்கொண்டிருக்கும் அவர், தன ஆசிரியர் காட்டும் கொடிகளின் பெயர்களை சட்டென்று கூறுகின்றார்.
Parenting Tips : வேலை vs குடும்பம் இரண்டையும் பேலன்ஸ் செய்ய சுலபமான வழிகள் இதோ..!!
தமிழகத்தின் தலைநகரான சென்னையை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் தான் க்ருதிஷா. இதற்கு முன்னதாக இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின் பெயர்களையும், அவற்றின் தலைநகர்களையும் சரியாகப் பெயரிட்டு சாதனை படைத்துள்ளார் அவர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.
க்ருதிஷாவின் தாய் சௌமியா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அவர் தனது மாணவர்களுக்காக அவர் நடத்திய கல்வி நடவடிக்கைகளை தனது குழந்தை கவனித்து வருவதாகவும், அதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் அவர் கூறினார். புகைப்படங்கள் மற்றும் சிலைகள் தொடர்பான தகவல்களையும் க்ருதிஷா மனப்பாடம் செய்ததாக அவர் கூறினார்.
தன் குழந்தை திறமைசாலியாக இருப்பதைக் கவனித்த சௌம்யா, உலகிலுள்ள அனைத்து நாடுகளின் பெயர்களையும் அவற்றின் கொடிகளால் அடையாளம் காண தன் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க முடிவு செய்தார்.
“அவர் இப்போது 195 நாடுகளின் கொடி பெயர்களை இடைவிடாமல் சொல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் என் கணவரும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது என் குழந்தைக்கு கற்பிக்க செலவிடுகிறோம், ”என்று சௌமியா கூறினார். க்ருதிஷா பெரிய விஷயங்களைச் சாதிக்க நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் கூறினார். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை உணர்ந்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உங்கள் குழந்தையும் நல்ல படிக்க நீங்க விரும்பினால் முதல்ல 'இத' செய்யுங்கள்!