Three workers have been killed in a factory near Vellore Ranipettai.

வேலூர் ராணிப்பேட்டை அருகே தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் பணி புரிந்து கொண்டிருந்த போது இயந்திரத்தில் சிக்கி 3 பேர் இறந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் வேலூர் மாவட்டம்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டதும், மிகப் பெரும் அளவிலான தோல் ஏற்றுமதியைக் கொண்டதுமாகும். 

இந்தியாவிலேயே முதன்முதலாக இங்குதான் தோல் உற்பத்திக்கூடங்கள் தொடங்கப்பட்டன. கர்நாடக நவாபின் காலத்தில் இது தொடங்கப்பட்டது.

தோல் தொழிற்சாலைகள் பெரும்பாலும் தொழிலாளர்கள் வேலைசெய்வதற்குப் பாதுகாப்பற்றவையாகத்தான் இருக்கின்றன எனவும் அபாயகரமான வேதிப் பொருட்களுடன் உற்பத்தியில் ஈடுபடுவதற்குத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு வந்தன. 

இந்நிலையில் ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் வேலைப்பார்த்து வந்த தொழிலாளர்கள் அருண், ராஜேந்திரன், ஜெய்சங்கர் ஆகியோர் இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.