Three people arrested for selling petrol without permission

தேனி

தேனியில் பெட்டி கடையில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்த மூன்று பேரை காவலாளர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் அனுமதியின்றி பெட்ரோல் விற்கப்படுகிறது என்று தேவதானப்பட்டி காவலாளர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனையடுத்து நேற்று காவலாளர்கள் தேவதானப்பட்டியில் சோதனை மேற்கொண்டனர். 
அந்த சோதனையின்போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் அனுமதியின்றி பெட்ரோல் விற்கப்படுகிறது என்பதை காவலாளர்கள் கண்டறிந்தனர்.

பெட்டிக் கடைகளில் வைத்து பெட்ரோல் விற்றுவந்த சண்முகம், முத்துச்சாமி மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய மூவரையும் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்த குற்றத்திற்காக காவலாளர்கள் கைது செய்தனர்.

பெட்டிக் கடையில் அவர்கள் வைத்திருந்த பெட்ரோலை பறிமுதல் செய்த காவலாளர்கள் அவர்கள் மூவரையும் விசாரித்து வருகின்றனர்.