தூத்துக்குடி

மீன்பிடி தொழிலாளர்களுக்கு வெளியில் இருந்து வந்து மிரட்டுவதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழிலாளராக புன்னக்காயலை சேர்ந்த சூசையா என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்டார்.

“சூசையாவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மீன்பிடி தொழிலாளர்களை வெளியில் இருந்து வந்து மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 250 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல், கரையிலேயே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் விசைப்படகு தொழிலாளர்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து புகார் மனு கொடுத்தனர்.