Thousands of people against Sterlite conducts rally

கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்களது எதிர்ப்பை காட்ட ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். 

ஆனால் அவர்கள் ஆட்சியரகத்துக்கு ஒரு கி.மீ. முன்னதாக மடத்துக்குளம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். மக்கள் மதுரை- தூத்துகுடி புறவழி சாலையை பொதுமக்கள் நெருங்க முடியாத வகையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 



144 தடை உத்தரவை மீறி பொதுமக்கள் பேரணி நடத்தியதால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். போராட்டம் தீவிரமடைந்து வருவதால் எந்த நிமிடத்திலும் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதையடுத்து பனியமாதா ஆலயத்தில் இருந்து மீனவர்கள் பேரணியாக சென்று அங்கே ஒரு போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். போலீஸ் வாகனத்தை கீழே தள்ளி பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.