Thol thirumavalavan speech against BJPs Activities
‘தமிழகத்தில் ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறது’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது, தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சி நிவாரண பணிகளுக்குப் போதிய அளவு நிதி ஒதுக்கவில்லை.
ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோதும் சரி, இ.பி.எஸ். முதல்வராக இருக்கும்போதும் சரி... இருவருமே தமிழர்களின் விரோதப்போக்கையே கடைபிடிக்கிறார்கள். மேலும், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
20 ஆண்டுகளாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள். அரசியலுக்கு வருவது அவர் கையில்தான் உள்ளது. ரஜினியை வைத்து அரசியல் செய்கிறது பாஜக' என்றும் நீதிபதி கர்ணனனுக்கு விதித்த தண்டனையை உச்ச நீதி மன்றம் நிறுத்தி வைக்க வேண்டும். கர்ணனின் மறு சீராய்வு மனுவை பரிசீலிக்காமல் ஒதுக்கியது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அவர் தெரிவித்துள்ளார்.
