this producer directly criticised super star

ரஜினிகாந்த் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்த கருத்துக்கள், தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ரஜினிகாந்த், ஊடகங்களிடம் பேசும் போது, “தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் சமூக விரோதிகள் தான்” என்று பொறுப்பில்லாத பதிலளித்தார்.

மேலும் “போராட்டம் போராட்டம்னு போனா நாடே சுடுகாடாகிடும்” என்று கோபமாக பேசிவிட்டு சென்றார். மக்கள் நல்ல காற்றை சுவாசிக்க முடியாமல், சுத்தமான நீரை குடிக்க முடியாமல் போகும் போது போராடாமல் என்ன செய்வார்கள்?. புற்று நோயால் தங்கள் வாழும் உரிமையே பறிபோய் கொண்டிருக்கும் போது கூட, மக்கள் போராடக் கூடாது என்றால் எப்படி?.

போராட்டத்தால் தானே இன்று நம் நாடே சுதந்திர நாடாகி இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டில் போராடக் கூடாது என்றால் எப்படி? என ரஜினிகாந்தின் கருத்தை எதிர்த்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன ஊடகங்கள்.

ரஜினியின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வளர்ந்து வரும் சினிமா தயாரிப்பாளரான சி.வி.குமார், தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். இவர் அட்டகத்தி, பீசா போன்ற படங்களை தயாரித்தவர். தற்போது 4ஜி, டைட்டானிக் காதலும் கவுந்து போகும், போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறார்

இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ”யாரும் மக்களுக்காக போராடாதீங்க. 80 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு எடுக்க போராடுங்க” என தெரிவித்திருக்கிறார்.

யாரும் மக்கள் பிரச்சனைக்கு போராடதீங்கப்பா.... 80 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு எடுக்க கடுமையா போராடுங்கப்பா.....

— C V Kumar (@icvkumar) May 30, 2018

ரஜினி-ன் படம் காலா விரைவில் ரிலீசாக இருக்கிறது. அவர் படம் என்றாலே முதல் நாள் முதல் ஷோவிற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இந்த சூழ்நிலையில் சி.வி.குமார் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது, ரஜினியை நேரடியாக தாக்குவது போல அமைந்திருக்கிறது.