ரஜினிகாந்த் ஹோலி படு விமர்சையாக கொண்டாடியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினிகாந்தின் இயற்பெயரான சிவாஜிராவ் என்ற பெயரை திரைப்படத்திற்காக கே.பாலச்சந்தர் ரஜினிகாந்த் என்று மாற்றினார். அந்த பெயர்மாற்றம் இன்றைய நாளில் தான் அரங்கேறியுள்ளது. 

வடமாநில இந்துக்களால் கோலகலமாக கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஹோலி. 

கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை  என முன்னோர்கள் கூறியுள்ளனர். 

வட நாட்டில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே இந்தப் பண்டிகை படு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். 

இதுகுறித்த புகைப்படங்களை ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதனிடையே இன்று காலை 10 மணியளவில் ரஜினிகாந்த் நடித்த காலா பட டீசர் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் ரஜினிகாந்த் ஹோலி படு விமர்சையாக கொண்டாடியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 

அதாவது, ரஜினிகாந்தின் இயற்பெயரான சிவாஜிராவ் என்ற பெயரை திரைப்படத்திற்காக கே.பாலச்சந்தர் ரஜினிகாந்த் என்று மாற்றினார். அந்த பெயர்மாற்றம் இன்றைய நாளில் தான் அரங்கேறியுள்ளது. இந்த தகவலை பி.ஆர்.ஓ நிகிழ்முருகன் தெரிவித்தார்.