Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுக்கு அப்போது இருந்த எதிர்ப்பு இப்போது இல்லை! அதிமுக வாக்கு சதவீதம் குறைவுக்கு இதுதான் காரணம்! தினகரன்.!

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். ஒரு சில சுயநலவாதிகளின் எண்ணத்தால் ஜெயலலிதாவின் கட்சி அழிக்கப்பட்டு வருகிறது. 

This is the reason for the decrease in AIADMK vote percentage! TTV Dhinakaran tvk
Author
First Published Jun 12, 2024, 2:37 PM IST


கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு இருந்த எதிர்ப்பு இப்போது இல்லாததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேட்டியளிக்கையில்: அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை. இந்த இயக்கத்தை எந்த நோக்கத்துக்காக தொடங்கினோமோ, அந்தக் காரணத்தில் எந்த விதத்திலும் அணு அளவு மாற்றம் இல்லை. அதிமுகவில் தவறான தலைமை உள்ள நிலையில் அங்கு இணைவது குறித்து கேட்பது தவறான கேள்வி. அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து உண்மை நிலையை உணர்ந்து நல்ல முடிவை எடுக்கும் போது, அது பற்றி நாங்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம். 

இதையும் படிங்க: கர்நாடகா காங்கிரசை கண்டிக்க முடியாத ஸ்டாலின்! மேடைக்கு மேடை மாநில உரிமைகளை பற்றி பேச வந்துட்டாரு! TTV.தினகரன்!

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். ஒரு சில சுயநலவாதிகளின் எண்ணத்தால் ஜெயலலிதாவின் கட்சி அழிக்கப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருப்பதால், ஜெயலலிதாவின் தொண்டர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். 

அதிமுகவுக்கு 2019ம் ஆண்டில் 20 தொகுதிகளில் பெற்ற வாக்கு சதவீதத்தில் இந்த தேர்தலில் குறைந்துள்ளது. திமுகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே அதிமுக தங்களது வேட்பாளர்களை நிறுத்தியது. என்றாலும் இதையெல்லாம் கடந்து தேசிய ஜனநாயக கூட்டணி 18.50 சதவீதம் வாக்கு விகிதத்தை பெற்றுள்ளது. வருங்காலத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும்.

இதையும் படிங்க:  Vikravandi By Election:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! பின் வாங்கும் அதிமுக? நீயா? நானா? போட்டிக்கு தயாராகும் பாமக

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு இருந்த எதிர்ப்பு இப்போது இல்லாததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு சிறுபான்மையினரும் வாக்களிக்கின்றனர். ஆனால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்காததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் குறைந்துள்ளது. தமிழக அரசு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலமாக பிடிவாதமாக இருக்கும் கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் கர்நாடக அரசுடன் பேசி தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை ஜெயலலிதா அப்போது ஆதரித்தார் அவரது வழியில் நாங்களும் அச்சட்டத்தை ஆதரிப்போம் என டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios