கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் 16 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடனே கன்னியாகுமரியிலும் கொண்டாடப்பட்டது. வடசேரி எஸ்எம்ஆர்வி பள்ளியின் பின்புறமுள்ள கேசவபெருமாள் காலனி, இருளப்பபுரம், கோட்டாறு வாகையடி தெரு, பறக்கை செட்டித்தெரு, பெருவிளை, கிறிஸ்டோபர் காலனி, பள்ளவிளை, ஆகிய இடங்களில் இராக்கெட் வெடித்தன. இதனால், அப்பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதே போல் தெற்குபகவதிபுரம், புலியூர், முகிலன்குடியிருப்பு, லீபுரம், கன்னீயாகுமரி நாச்சியார் குடியிருப்பு, விவேகானந்தபுரம், ஆகிய பகுதிகளில் தென்னை மரங்களின் மீது இராக்கெட் வெடி விழுந்ததில் மரம் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
மேலும் பறக்கை மேலத்தெருவில் வீட்டு மாடியில் இருந்த குடிசை வீடும் தீயில் கருகியது, தீயணைப்புப் படையினர் வந்த பின்னரே தீயை அனைக்க முடிந்தது.
மணக்குடி மணவாளபுரத்தில் கோயில் திருவிழாவிற்கு போடப்பட்டிருந்த பந்தல் மீது பட்டாசுகள் விழுந்ததில் பந்தல் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கன்னியாகுமரி தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்தனர்.
மகாதானபுரத்தில் மாடியின் மேல் போடப்பட்டிருந்த ஓலை குடிசையில் வெடிவிழுந்ததில் கூரை எரிந்து சேதமானது.
இதுபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 16 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
