this chief minister says he will remove the banners by himself

பொதுவாகவே பேனர்கள் சுற்றுசூழலை மாசுபடுத்துவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. இதனால் புதுச்சேரியில் பேனர்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதுச்சேரியை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆண்டுவருகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு வரும் 30ம் தேதி பிறந்தநாள் வரவிருக்கிறது.

இதனை கொண்டாட கட்சி நிர்வாகிகள் பலவிதமான திட்டங்களை தீட்டி இருக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொண்டர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதன்படி ”யாரேனும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் அமைத்தால், அதனை தன் சொந்த செலவில் நீக்கிவிடுவேன்” என கூறியிருக்கிறார்.

தாங்கள் போட்ட சட்டத்தை தாங்களே மதிக்காத கட்சிகளுக்கு மத்தியில் , சுற்று சூழல் மீது அக்கறையுடனும், பொதுவான விதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இவர் செய்திருக்கும் இச்செயல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுத் தந்திருக்கிறது.