418 ஆண்டுகளுக்கு பின் ஆதிகேசவ பெருமாள் கோவில் குடமுழுக்கு.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை..
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் உள்ளா அதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா குடமுழுக்கு நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் உள்ளா அதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா குடமுழுக்கு நடைபெற்று வருகிறது.
புகழ் பெற்ற திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் ஆதிகேசவ பெருமாள் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு, இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் பங்கேற்பு பங்கேற்றனர். இந்த விழாவில் வெளி மாநில , மாவட்ட மற்றும் உள்ளூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிவறை மற்றும் மருத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:Sukran Peyarchi 2022: குரு பூர்ணிமா நாளில் சுக்கிரன், புதன் கூட்டணி....எந்தெந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம்...
இன்று காலை 6 மணிக்கு சரியாக கோவில் குட முழுக்கு நடைபெற்றது. மேலும் கும்பங்களுக்கு மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கர கோஷம் எழுப்பினர். பிரதான ஆலயத்தின் குடமுழுக்கு நிறைவுபெற்றதையடுத்து, மற்ற கோவில்களில் குடமுழுக்கு நிகழ்வானது தற்போது நடைபெற்று வருகிறது. 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதி என்பதால், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று குடமுழுக்கு நிகழ்வை பார்த்தனர். மேலும் கோவிலில் நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிய தொடங்கிவிட்டனர்.
மேலும் படிக்க:Sukran Peyarchi: ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் பிரவேசம்....இந்த ராசிகளுக்கு இன்னும் 10 நாட்களில் தலைவிதி மாறும்..
இதனால் சாமிதரிசனம் செய்ய ஆங்காங்கே பெரிய எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளனர். கோவிலின் இடவசதி காரணமாக பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரக்கூடும் என்பதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடமுழுக்கை முன்னிட்டு வழிப்பாடு செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதால், தடுப்புகள் அமைத்து கோவிலின் முன்புறம் வழியாக அனுமதித்து வருகின்றனர்.