திருவாரூர் இடைத்தேர்தலுக்கு எதிரான வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தின் தொடுத்த வழக்கை நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரிக்க உள்ளது.  

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் திருவாரூரில் கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெற்றால் அங்கு நிவாரணப்பணிகள் நிறுத்தப்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது முக்கியமான வழக்கு என்பதால் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரிக்க உள்ளது. இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறுகையில் தேர்தல் தள்ளிப்போக அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மேலும் திருவாரூர் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளவேண்டியது