உனக்கு 17...எனக்கு 27... கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த 2 குழந்தைகளின் தாய்...!

2 குழந்தைகளின் தாய் கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கல்லூரி மாணவரை கடத்திச்சென்றதாக பெற்றோர் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

thiruvannamalai near 2 childrens mother flow with college student escape

2 குழந்தைகளின் தாய் கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கல்லூரி மாணவரை கடத்திச்சென்றதாக பெற்றோர் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவன். இவர் செய்யாறு அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கலசப்பாக்கம் அருகே உள்ள பொற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது பெண். திருமணமான இவருக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். thiruvannamalai near 2 childrens mother flow with college student escape

சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தைகளை கணவரிடமே விட்டுவிட்டு தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் அதே தெருவில் வசிக்கும் அந்த மாணவருடன், இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் செல்போன்களை பரிமாறி அடிக்கடி தனிமையில் பேசி வந்தனராம். மாணவன் மீது அந்த பெண்ணுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்ற மாணவன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர், கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, கடந்த 11ம் தேதி காலை அந்த கல்லூரிக்கு சென்ற அந்த பெண், மாயமான அந்த மாணவரை தனது தம்பி எனக்கூறி, வீட்டில் பிரச்சனை உள்ளதால் சமாதானம் செய்யவேண்டும். எனவே அவனை என்னுடன் அனுப்பி வையுங்கள்’ எனக் கூறினார். இதைநம்பிய கல்லூரி நிர்வாகமும், அந்த மாணவரை, அந்த பெண்ணுடன் கடிதம் எழுதி பெற்று அனுப்பி வைத்ததாக கூறியது. thiruvannamalai near 2 childrens mother flow with college student escape

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர், அனக்காவூர் போலீசில் நேற்று புகார் செய்தனர். அதில், ‘அந்தப் பெண், எங்கள் மகனை ஏதோ ஆசை வார்த்தைக்கூறி கடத்திச்சென்றுள்ளார்’ என தெரிவித்திருந்தனர். அதன்பேரில் இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணுடன் பாலிடெக்னிக் மாணவர் மாயமான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios