கார்த்திகை தீப விழா அன்று பக்தர்கள் மலையேற தடை!!! திருவண்ணாமலையில் அதிரடி முடிவு!

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

Thiruvannamalai Karthigai Deepam festival...Mountain ban

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு கார்த்திகை தீப திருநாள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். Thiruvannamalai Karthigai Deepam festival...Mountain ban

கார்த்திகை தீப திருவிழாவின் போது திருவண்ணாமலையிலுள்ள மலை மீது ராட்சத கொப்பரையில் 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை இணைத்து தீபம் ஏற்படும். இந்த தீபமானது காற்று, மழை வந்தாலும் அணையாமல் அப்படியே இருப்பது சிவனின் அருளால் என்பது ஐதீகம்.

 Thiruvannamalai Karthigai Deepam festival...Mountain ban

இந்த தீப தரிசனத்தை காண பக்தர்கள் அதிகாலை முதற்கொண்டே மலையேறி காத்துக் கொண்டிருப்பர். மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். Thiruvannamalai Karthigai Deepam festival...Mountain ban

இந்நிலையில் மலையேறும் பக்தர்களுக்கு போதிய பாதிகாப்பு அளிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. ஆகையால் கடந்த ஆண்டு மலையேறி சென்று தீபத்தை பார்க்க தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த ஆண்டும் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios