Thiruvallur Collector forced to join the children in government school
திருவள்ளூர்
திருவள்ளூரில் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த சோழவரம் ஒன்றியத்துக்கு உள்பட்டது பெரவள்ளூர் கிராமம்.
இங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்தல் மற்றும் இடைநின்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். மேலும், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், வீடு, வீடாகச் சென்று பள்ளி வயது குழந்தகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை ஆட்சியர் வழங்கினார்.
ஆட்சியருடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன், பொன்னேரி மாவட்டக் கல்வி அலுவலர் கங்காதரரெட்டி, தொடக்கக் கல்வி அலுவலர் குமாரசாமி, மற்றும் ஆசிரியர்கள் பலர் உடன் சென்று விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
