MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • விஜய் வைத்த பொறியில் சிக்கிய காங்கிரஸ்... ராகுல் அந்தர் பல்டி? அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

விஜய் வைத்த பொறியில் சிக்கிய காங்கிரஸ்... ராகுல் அந்தர் பல்டி? அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

நாம் ஏன் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதை விட, புதிய முயற்சி எடுத்து தவெகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள கூடாது என ராகுல் காந்தி ஆலோசிப்பதாக தெரிகிறது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 06 2026, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் உச்சமெடுத்து வருகின்றன. அதிகபட்சம் 30 தொகுதிகள் ஒதுக்கித் தருவதாக திமுக முன் வந்த நிலையில் திடீரென ராகுல்காந்தி தனது திமுக கூட்டணி முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் என்கிறார்கள்.தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் மிகப்பெரிய ஆஃபர்கள் கிடைக்கும் என நினைக்கும் காங்கிரஸ் இறுதிக்கட்டமாக தவெகவுடன் கூட்டணி என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி போட்டு 25 தொகுதிகளில் போட்டியிட்டது. 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக தொகுதி தொகுதிகளை ஒதுக்கி தரும்படி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. உச்சகட்டமாக முப்பது தொகுதிகள் வரை ஒதுக்கி தரலாமென திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தபட்சம் 35 தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

திமுக தரப்பில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 120 தொகுதிகள் வெற்றி பெற்று விட வேண்டும் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கினால் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் என அனைத்துக் கட்சியினருக்கும் தொகுதிகளை அதிகப்படுத்தி தர வேண்டிய சூழல் ஏற்படும். இதற்கிடையே தவெகவுக்கு சரியான கூட்டணி எதுவும் அமையவில்லை. கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டால் தேர்தலில் வெற்றி கிடைக்காது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் தங்களுடைய கூட்டணி குறித்து ஒரு முடிவுக்கு வந்திருப்பதால் தற்போது தவெகவுக்கு கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

Related Articles

Related image1
தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு.. 50 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தானில் பயங்கர கொடூரம்
34
Image Credit : x

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை விட்டால் வேறு வழி இல்லை என்று நிலைமைக்கு தவெக தள்ளப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் விஜய் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு எந்த வகையிலாவது காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். இதற்கிடையே தவெக சார்பில் போட்டியிடுவதற்கு சரியான வேட்பாளர்களும் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் தேர்தல் செலவுக்கு போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமல் தள்ளாடுகின்றனர். இதன் ஒரு கட்டமாக தேர்தல் செலவு நிதிகளை காங்கிரஸ் சில தொகுதிகளில் பார்த்து கொள்ளும். வேட்பாளர்கள் தேர்வு எளிதாக இருக்கும் என தவெக நம்புகிறது.

44
Image Credit : X

இதன் ஒரு கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கி தரலாம். ஒரு துணை முதல்வர் பதவி தரப்படும் என்றும், மூன்று அமைச்சர்கள் பதவிகள் தரப்படும் என்றும் தவெக முடிவெடுத்துள்ளது. இது குறித்த தகவல்கள் சில முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. நாம் ஏன் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதை விட, புதிய முயற்சி எடுத்து தவெகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள கூடாது என ராகுல் காந்தி ஆலோசிப்பதாக தெரிகிறது. எனவே தவெக- காங்கிரஸ் தரப்பில் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அநேகமாக தவெக பக்கம் காங்கிரஸ் கட்சி திசை திரும்புவது உறுதி என்கிறார்கள் கதர் சட்டை தரப்பினர்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
NEET Protest: களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல..!
Recommended image2
வைகோ பின்பற்றுங்கள்..! தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்! என்ன நடக்குது நாட்டுல...?
Recommended image3
உண்ணாவிரத்தை வாங்சுக் வாபஸ் பெற்றாலும்; சூடு குறையாத CJP போராட்டக்களம்!
Related Stories
Recommended image1
தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு.. 50 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தானில் பயங்கர கொடூரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved