thirumavalavan comprimise between vck cadres
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்லகலைக்கழகத்தில் உயிரிழந்த சேலம் மாணவர் முத்துகிருஷ்ணனின் குடும்பத்தினரை விடுதலை சிறுத்தை கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சந்தித்து 1.25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் முத்துகிருஷ்ணனின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

டெல்லியில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் மீது மத்திய மாநில அரசு எந்த அக்கரையும் காண்பிக்கவில்லை என்பது வேதனைக்குரியது என்ற அவர் விவசாய சங்கங்கள் ஏப்ரல்13ம்தேதி அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது கட்சியை சேர்ந்த 2 பேர் அவருக்கு அருகிலேயே சட்டையை பிடித்துக்கொண்டு சண்டை போட்டனர். அவர்களை திருமாவளவன் சமாதானப்படுத்தி வைத்தார்.
