Thirumangalam police investigation. House breaking in a IAS officer house

சென்னையில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலம் அம்பத்தூர் இண்டஸ்ரியல் எஸ்டேட் சாலையில் வசித்து வருபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தாமரை. இவர் வழக்காமக காலை பணிக்கு சென்று விட்டு இரவு தான் வீடு திரும்புவார்.

இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர், மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 சவரன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டிலேயே நகை திருட்டு போயிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.