Thilakavathi press meet
ஓபிஎஸ் தான் தமிழகத்தை ஆள வேண்டும்… முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி அதிரடி…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஆயிரம் சந்தேகங்களுக்கு அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் இது தொடர்பாக தனது உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த எண்ணங்களுக்கு, விடையளிக்கும் விதமாக ஓபிஎஸ்ன் செயல்பாடுகள் இருந்ததால் அவருடன் இணைந்து செயல்பட முடிவு செய்ததாக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திலகவதி, தமிழகத்தின் தன்னிகரற்ற ஆளுமைத்திறன் கொண்ட தலைவராக இருந்த, ஜெயலலிதாவின் மரணமும், அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் தன்னை மிகுந்த வருத்தமடையச் செய்ததாக தெரிவித்தார்.
ஆனால் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு, கிருஷ்ணா நதி நீர், வர்தா புயல் போன்ற பிரச்சனைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தான் ஒரு திறமை மிக்கவர் என்பதை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டினார்.
இப்படி சிறப்பாக செயல்பட்ட ஓபிஎஸ்ஐ சசிகலா, திட்டமிட்டு, பதவியில் இருந்து கீழிறக்கி, அதில் தான் அமர வேண்டும் என நினத்தது ஆணவத்தின் உச்சம் என தெரிவித்தார்.
இத்தகைய சூழ்நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவு அளிப்பதே சிறந்தது என முடிவு செய்து செயல்படவுள்ளதாக தெரிவித்த திலகவதி, ஓபிஎஸ் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என அதிரடியாக தெரிவித்தார்.
