தென் மாவட்டங்களில் 3 மணிநேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் மூன்று தென் மாவட்டங்களில் இன்னும் 3 மணிநேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மூன்று மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 7ஆம் தேதி வரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறுகிறது.
16 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை... உடலை ஆற்றில் வீசிச் சென்ற ஆட்டோ டிரைவர்
இன்று (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பப்ஜி காதலனைத் தேடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!