Asianet News TamilAsianet News Tamil

16 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை... உடலை ஆற்றில் வீசிச் சென்ற ஆட்டோ டிரைவர்

அசாம் மாநிலத்தில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, உடலை ஆற்றில் வீசிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Assam Class 8 Student Raped, Murdered, Body Thrown In River
Author
First Published Jul 3, 2023, 3:02 PM IST

வடகிழக்கு மாநிலமான அசாமில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபர் உடலை ஆற்றில் வீசி சென்றுள்ளார். கவுகாத்தியில் அமைந்துள்ள காமரூப் (மெட்ரோ) மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளதாக அசாம் போலீசார் கூறுகின்றனர். 8ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி, கடந்த திங்கட்கிழமை தனது போனை ரீசார்ஜ் செய்வதற்காக வெளியே சென்றிருக்கிறார். ஆனால் வெளியே போன அவர் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.

விளம்பரத்துக்கு எவ்ளோ செலவு பண்றீங்க... நிதி இல்லை என்ற டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

Assam Class 8 Student Raped, Murdered, Body Thrown In River

நான்கு நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமை சிறுமியின் உடல் சோனாபூரில் உள்ள திகரு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் சோனாபூர் காவல் நிலையத்தில் கூடி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மக்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் ஒரு ஆட்டோ ஓட்டுநராக இருப்பதாவும் பிடிப்பட்டதும் காவல்துறையினரிடம் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

மக்கள் நலனுக்காக பெண் முதலையை திருமணம் செய்துகொண்ட மெக்சிகோ மேயர்

Follow Us:
Download App:
  • android
  • ios