தென் மேற்கு பருவ மழையில்,  நாட்டில் நான்கில் ஒரு பகுதியில் மழை பற்றாக்குறை இருக்கும், இந்த சூழல் அடுத்து வரும் மாதங்களில் மாறும் என்று இந்திய வானிலை மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம்(ஐ.எம்.டி) தலைவர் கே.ஜே.ரமேஷ் வௌியிட்டஅறிவிப்பில் கூறியிருப்பதாவது-

தென் மேற்கு பருவ மழையில்  நாடுமுழுவதும் 5 சதவீதம் ஒட்டுமொத்த பற்றாக்குறை மழை இருக்கும், ஆனால், 26 சதவீதத்துக்கும் மேலாக, பெரும்பாலான நிலப்பகுதியில் மழை பற்றாக்குறை இருக்கிறது.

மத்தியப்பிரதேசம், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில் மழைப் பற்றாக்குறை நிலவுகிறது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையில் பெய்யும் நடப்ப தென் மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும். கர்நாடகத்தின் தெற்கு உள்பகுதி மாவட்டங்கள், கடற்கரை பகுதிகள், வடபகுதிகளில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பொழிவுகாணப்பட்டது. மேலும், மத்தியப் பிரதேசம் மற்றும் மாரத்வாடா பகுதியில்மழை தொடங்கிவிட்டது, அடுத்து வரும் நாட்களில் சூழல் மாறக்கூடும்.

நடப்பு தென் மேற்கு பருவக்காற்று மழையின் 2-ம் பகுதி 100 சதவீதம் நீண்ட கால சராசரி மழை பொழிவைக் கொடுக்கும். ஆகஸ்ட் மாதம் 99 சதவீதம் பெய்யும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், பலமாநிலங்களில் பருவமழை பற்றாக்குறையால், கரீப் சீசனில் பயிரிடப்பட்ட பயிர்களின் விளைச்சல்  பாதிக்கப்பட்டன. கர்நாடகத்தின் உள் தெற்குப்பகுதிகளில் 20 முதல் 25 சதவீதம் மழை பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோல, மாரத்வாடா, மஹாராஷ்டிராவின் விதர்பா மண்டலத்திலும் 32 சதவீதம் மழை பற்றாக்குறை நிலவுகிறது.

மத்தியப்பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும் 23 சதவீதம் மழை பற்றாக்குறை  இருக்கிறது. கேரள மாநிலத்தில் தொடர்ந்து 2-வது ஆண்டாக மழை பற்றாக்குறை நீடிக்கிறது.

அதேசமயம், உத்தபிரதேசத்தின் கிழக்குப்பகுதி, பீகார், அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மழை வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

நல்ல மழை இருக்கும்

இதற்கிடையே நில அறிவியல் துறை அமைச்சகத்திந் செயலாளர் மாதவன் ராஜீவன்டுவிட்டரில் விடுத்த அறிக்கையில் கூறுகையில், “ மஹாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம்,குஜராத் உள்ளிட்ட நாட்டின் மத்தியப் பகுதிகளில் அடுத்த 2 வாரங்களுக்கு நல்லமழை பொழிவு இருக்கம். பற்றாக்குறை மழை அடுத்தவரும் காலங்களில் சரியாகும். அதேசமயம், பல இடங்களில் மழை வௌ்ளம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.