there is no plastic rice in TN says rice association

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரசி இல்லை என்றும் பிளாஸ்டிக் அரிசி சாப்பிட்டால் கால்நடைகள் கூட உயிர் வாழாது எனவும் தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வதாக அடுத்தடுத்து புகார்களும் வலைதளங்களில் எச்சரிக்கை புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்து மக்களை பீதியடைய செய்கின்றன.

இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு முகாம் நடத்தி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசியே இல்லை எனவும், யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

ஆனால் பிளாஸ்டிக் அரிசியில் சமைத்து பந்து போல் அடித்து அடித்து விளையாடும் வீடியோ இன்னும் குறைந்தபாடில்லை. இதனிடையே உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் எனவும், தமிழகத்தில் கலப்படம் தொடர்பான புகார்களை94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் பிளாஸ்டிக் அரசி இல்லை என்றும் பிளாஸ்டிக் அரிசி சாப்பிட்டால் கால்நடைகள் கூட உயிர் வாழாது எனவும் தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.